சென்னையில் உலக அளவிலான ஐடி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஜி 20 டிஜிஏ சர்வதேச மாநாட்டின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த சேவை துறையில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

தமிழ்நாட்டில் மிக திறமை வாய்ந்த படித்த இளைஞர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். அதன் பிறகு வருகின்ற 23, 24, 25 தேதிகளில் உலக அளவில் உள்ள ஐடி நிறுவனங்களின் தொழில்நுட்ப தலைவர்கள் கலந்து கொள்ளும் இமேஜின் சென்னை எனும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மேலும் இதில் இளைஞர்கள் பதிவு செய்து பங்கேற்று உங்களுடைய புதுமையான யோசனைகளை பகிர்ந்து உலக அளவில் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டிருக்கும் மேம்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.