
மராட்டிய அரசில் ஒப்பந்த தொழிலாளர்களாக ஹர்ஷ் குமார் ஷீர்சாகர் வேலை பார்த்து வருகின்றனர். இவருக்கு மாதம் 13,000 சம்பளமாக வழங்கப்பட்டது. ஆனால் அவர் திடீரென BMW காரில் வளம் வரத் தொடங்கினார். அதோடு தனது காதலிக்கு 4BHK கொண்ட வீடு ஒன்றை வாங்கி பரிசாக கொடுத்துள்ளார். இதனை பார்த்த சக பணியாளர்கள் ஆச்சரியமடைந்தனர். இவ்வளவு தொகை அவருக்கு எப்படி வந்தது என்பது தெரியாமல் திகைத்தனர். BMW கார், BMW பைக், 4BHK வீடு, வைரங்கள் பதிக்கப்பட்ட கண்ணாடி என சாகர் வசதியை பெருக்கிக் கொண்டே இருந்தார்.
அவருடன் சேர்ந்து சக பணியாளர் உடைய கணவர் 35 லட்சத்திற்கு சமீபத்தில் கார் ஒன்றை வாங்கி இருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து 21 கோடி ரூபாய் அளவிற்கு அரசு நிதியை மோசடி செய்து, அதன் கிடைத்த பணத்தை வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். முதலில் இவர்கள் விளையாட்டு வளாகம் என்ற பெயரில் வங்கி கணக்கை தொடங்கி, போலி ஆவணங்களை கொடுத்து, துணை இயக்குனரின் கையெழுத்துக்களை இவர்களே போட்டு காசோலைகளை தயாரித்து மோசடி செய்தனர். இதில் சாகர் மற்றும் யசோதா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ஜீவன் ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.