
காங்க்ராவின் ஜவாலியில் உள்ள சித்புர்கரி பகுதியில் அரசு பள்ளி மாணவர் விவேக்குமார் என்பவர் கடந்த ஐந்தாம் தேதி அன்று பள்ளி வாசலில் வைத்து பலூன் ஊதி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த பலூன் வெடித்து, அவரது தொண்டையில் சிக்கியது.
இதனால் அவருக்கு வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனை அறிந்த ஆசிரியர்கள் உடனே விவேக்கை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் விவேக்கின் தந்தை, தாய் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் மருத்துவமனையின் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்தனர். இதற்கு முன்னால் எம்.பி நிராஜ் பார்தி விவேக்கின் சிகிச்சைக்காக ரூபாய் 50,000 நன்கொடையாக வழங்கினார். இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் 2 நாட்கள் கழித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.