
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான சத்திரத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் இந்த அன்னதான சத்திரத்தில் சிறுவன் ஒருவர் கூட்ட நெரிசலில் இறந்து விட்டதாக செய்தி பரவி வருகிறது. ஆனால் அதை திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது. இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது, கடந்த 2022 ஆம் தேதி கர்நாடகாவை சேர்ந்த சிறுவன் அன்னபிரசாத சத்திரத்தில் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த சிறுவன் நீண்ட காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டு, 6 வருடங்களுக்கு முன்பு இதைய சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில ஊடகங்களில் அச்சிறுவன் அன்னதான சத்திரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர். அது உண்மையல்ல. இது போன்ற தவறான செய்திகளை வெளியிடுபவர்கள், உண்மைக்கு புறம்பான தகவலை பரப்புவார்கள் மற்றும் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.