சென்னையில் உள்ள மாடம்பாக்கத்தில் உள்ள தெருவில் கடந்த 3-ம் தேதி அன்று பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து வேகமாக வந்த ஆட்டோ ஒன்று பெண்ணின் மீது மோதியது. இதில் அப்பெண் பலத்த காயம் அடைந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அப்பகுதியில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதை அடுத்து, விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் அஜாக்கிரதையாக ஆட்டோவை இயக்கி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சிறுவர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.