
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிந்துதுர்க்கில் இருக்கும் ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலை இருந்தது. கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அந்த சிலையை திறந்து வைத்தார். இந்த நிலையில் சிந்துதுர்க்கில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து சுரைக்காற்று வீசுகிறது. இதனால் நேற்று மதியம் ஒரு மணிக்கு சக்கரவர்த்தி சிவாஜி சிலை உடைந்து விழுந்தது. சுமார் 35 அடி உயரம் உள்ள சிலையின் தலை, கை, கால்கள் என ஒவ்வொரு பாகமும் தரையில் விழுந்தது.
இதனை காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் உள்ளது. பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜி சிலையை திறந்து வைத்தார். அந்த சிலை எட்டு மாதங்களிலேயே இடிந்து விழுந்து விட்டது. ஊழலில் பெரிய மனிதர்களின் சிலைகள் கூட தப்பவில்லை என பதிவிட்டுள்ளனர். மேலும் பிரதமர் சிவாஜி சிலையை திறந்து வைத்த வீடியோ மற்றும் சிலை இடிந்து விழுந்த வீடியோ அனைத்தையும் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.