
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஏப்ரல் 13ஆம் தேதி இரவு நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகரின் நாரிபாரி பகுதியில், சுமார் இரவு 9 மணியளவில் ஒரு பயணிக்காக சென்ற கார் மீது அடையாளம் தெரியாத இரு மோட்டார் சைக்கிள் வெடிகுண்டை வீசியுள்ளனர்.
சுபம், வேத் மற்றும் விக்கி என்ற 3 பேர் அந்த காரில் இருந்த நிலையில், அவர்கள் ப்ரயாக்ராஜ் நகரில் நடக்கவிருந்த திருமண நிகழ்வுக்கு புறப்பட்டுச் சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. சம்பவத்தின்போது கார் சில நிமிடங்களுக்கு நாரிபாரியில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அந்த தருணத்தில் பின்தொடர்ந்திருந்த மர்ம நபர்கள் குண்டை வீசி தப்பியோடியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
उत्तर प्रदेश : जिला प्रयागराज में बाइक सवार बदमाशों ने कार के ऊपर 2 बम फेंक दिए !! pic.twitter.com/p00zIsdvb9
— Sachin Gupta (@SachinGuptaUP) April 14, 2025
இந்த தாக்குதலின் வீடியோ அங்கு அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வெடிபொருள் காரில் வெடித்ததையடுத்து, கண்ணாடிகள் சிதறி பயணிகள் பெரும் பதற்றத்துடன் காரிலிருந்து வெளியே தப்பி ஓடியுள்ளனர். சிறிது காயமடைந்த அந்த மூவரும் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பியுள்ளனர்.
இத்தாக்குதல் தொடர்பாக ப்ரயாக்ராஜ் டிசிபி விவேக் யாதவ், ஏசிபி குஞ்சலதாவுக்கு விசாரணை உத்தரவு வழங்கியுள்ளார். இந்த சம்பவம் சம்பந்தமாக சந்தேகிக்கப்படும் நபர்களை பிடிக்க விசேஷ தளவாடக் குழுவும் (SOG) சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.