அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பிலடெல்பியா நகரத்திற்கு அருகே கெனெட் ஸ்கொயர் பகுதியில், சிக்னலில் நின்று கொண்டிருந்த காரின் மீது பெரிய மரம் ஒன்று திடீரென விழுந்தது. இந்த நேரத்தில் காரை ஓட்டிக் கொண்டிருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிருடன் தப்பினார்.

 

இந்த சம்பவம் முழுவதும் அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, தற்போது இணையத்தில் பரவி வருகிறது. வீடியோவில், மரம் விழும் அதிர்ச்சிகரமான தருணமும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற வாகனங்களும் தெளிவாகக் காணப்படுகின்றன. இந்த சம்பவத்தையடுத்து, அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த வீடியோ எப்போது எடுத்தது என்பது உறுதி செய்யப்படவில்லை.