
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர், அஜ்மீர் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அந்த காரில் தீப்பிடித்து உள்ளது. இதனை உடனே அறிந்த அந்த காரின் ஓட்டுனர் ஜிஜேந்திர ஜாங்கிட் காரை உடனடியாக நிறுத்தி காரில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த கார் மேம்பாலத்தின் மேல் எரிந்து கொண்டிருந்தது. இதனை அந்த வழியே சென்ற பொதுமக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென கார் ஆளில்லாமல் முன்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி நகர்ந்தது.
இதனால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். கார் வேகமாக சென்று அங்கிருந்த பாலத்தின் டிவைடரில் மோதி நின்றது. இச்சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காரில் எறிந்த தீயை முழுவதுமாக அணைத்தனர். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் எந்தவித உயிர் பாதிப்பும் ஏற்படவில்லை.