சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து போலூர்க்கு சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்து வந்தவாசி, சேத்துப்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தது. அரசுப் பேருந்தை ஓட்டி வந்தவர் காசி என்பவர் ஆவார். எதிர் புறத்தில் பல்லடம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் ஆழியூர் கிராம கோவில் கும்பாபிஷேகத்திற்காக நாற்காலிகளை தன்னுடைய சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு ஓட்டி வந்தார்.

இதனை அடுத்து அரசு பேருந்தும், சரக்கு வேணும் கொழப்பலூர் கிராமத்திற்கு அருகே வந்த போது ஒன்றை ஒன்று எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டது. இதில் வேனை ஓட்டி வந்த மோகன் மீது பேருந்து மோதியதால் உடல் நசுங்கி துடி துடித்து இறந்தார். அரசு பேருந்து ஓட்டுனர் காசி, பேருந்தில் வந்த பயணிகள் 5 பேர்,சரக்கு வேனில் வந்த ஒருவர் உள்ளிட்டோர்கள் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த 7 பேரை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அரசுப் பேருந்தும், வேணும் விபத்துக்குள்ளானது அப்பகுதியில் போக்குவரத்தை பாதித்துள்ளது.