புனேவில் உள்ள சகன் என்ற பகுதியில் கடந்த செப்டம்பர் 8ம் தேதி ஆண் குழந்தை ஒன்று தெருவில் விளையாடு கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அங்கு வந்த 7 முதல் 8 நாய்கள் அந்த குழந்தையை தாக்கியுள்ளன. இதனால் அந்த சிறுவன் அலறிய சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற ஓடி வந்தனர். இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.