
பஞ்சாபில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் பாகிஸ்தான் மற்றும் சீனாவில் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த டிசம்பர் 25ஆம் தேதி பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தின் எல்லையில் டிரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
தடவியல் அதிகாரிகளின் ஆய்வில் இந்த ட்ரோன் சீனா மற்றும் பாகிஸ்தானில் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 22 டிரோன்கள் பஞ்சாப் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ள அதிகாரிகள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.