
இன்ஸ்டாகிராம் மூலம் ஆன்மீக பதிவுகளை அதிகமாக பதிவிட்டு 9.5 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்புகளை வைத்துள்ள சிறுவன் அபினவ் அரோரா. இவரது வீடியோக்களை பலரும் விமர்சித்தும், கொண்டாடியும் வருகின்றனர். இவர் தனது மூன்று வயதில் இருந்தே ஆன்மீக சொற்பொழிவு செய்த வருவதாக கூறப்படுகிறது. பத்து வயதான அபினவ் அரோரா ஆன்மீக சொற்பொழிவு மூலம் பிரபலமானார். இந்த நிலையில் அபினாவுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து தொலைபேசியில் கொலை மிரட்டல் வந்ததாக அபினவ் அரோரா தாயார் தெரிவித்திருந்தார்.
இது குறித்து அபினவ் அரோரா தாயார் கூறியதாவது, இவ்வாறு கொலை மிரட்டல் விடும் அளவிற்கு எனது மகன் எந்த தவறும் செய்யவில்லை. பக்தியை தவிர அவனுக்கு வேறு எதுவும் தெரியாது. சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி வருவதால் அவனது வளர்ச்சி பிடிக்காத சிலர் இவ்வாறு மிரட்டல் விடுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு மிரட்டுபவர்களை கண்டறிந்து காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தார். ஏற்கனவே அபினவ் அரோரா பிரபல ஆன்மீகத் தலைவர் சுவாமி நாம பத்ராச்சாரியா உடன் சொற்பொழிவாற்றும் வீடியோ வைரலான நிலையில் தற்போது இவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.