
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வசிக்கும் டேவிட் ஜோன்ஸ், தனது மகளின் திருமணத்தில் பங்கேற்பதற்காக இயற்கையின் சவால்களை தாண்டி 50 கி.மீ. தூரம் நடந்த சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மகள் எலிசபெத்தின் திருமணம் அந்நகரில் நடந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள் ஜோன்ஸ் வேறொரு பகுதியில் இருந்தார். அங்கு மிகப்பெரிய புயல் மழை பெய்தது.
இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், வாகனங்களில் அந்த இடத்திற்கு செல்ல முடியவில்லை. ஜோன்ஸ், ஒரு மாரத்தான் வீரர் என்பதால், இந்த சவாலை எதிர்கொண்டு 50 கி.மீ தூரம் நடந்தே செல்வதாக தீர்மானித்தார். அத்தியாவசியமான பொருட்களை ஒரு பையில் வைத்துக் கொண்டு, அந்தப் பையை முதுகில் சுமந்தபடி, புயல் மழைக்குள் தனது நடை பயணத்தை தொடங்கினார்.
கடும் புயலிலும், பரபரப்பான சூழ்நிலையிலும், சுமார் 12 மணி நேரத்தில் 50 கி.மீ தூரத்தை கடந்து அவர் மகளின் திருமணத்திற்கு சரியாக வந்து சேர்ந்தார். அவருடைய இந்த கடினமான பயணம், அவர் தந்தை என்ற முறையில் தன் மகளுக்கு கொடுக்கும் மகத்தான அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தியது. இதனை அறிந்த மக்கள், டேவிட் ஜோன்ஸின் தியாகத்தை பாராட்டி, அவரை ஆண்டின் சிறந்த தந்தை என்று சிறப்பித்தனர்.