
செய்தியாளர்களிளிடம் பேசிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இந்த அரசாங்கம் என்ன பண்ணுது ? பொங்கலுக்கு கிளம்பக்கத்திலிருந்து யாரும் ஊருக்கு போக முடியல. எல்லாம் தவிச்சு போய் நின்னுட்டாங்க, அதை மறைச்சு ஆகணும். ஜல்லிக்கட்டுல பெரிய குளறுபடி இப்பயும் தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கு. அங்க போய் நின்னுகிட்டு மந்திரி செயல்பட்டுக்கிட்டு இருக்காரு. நாம போகலாமா ? அங்க…
ஒரு விழாவை தொடங்கி வைக்கப் போறீங்க, போங்க வந்துருங்க. மத்தபடி உள்ளூர் ஜனங்கள் இருக்காங்க… அவங்க கட்டுக்கோப்போடு செஞ்சு முடிக்க போறாங்க… உங்களுக்கு என்ன அங்க இருக்கு ? நீங்க என்ன பண்றிங்க அங்க… நான் சொல்ற மாடை தான் இப்போ நீ சொல்லணும்… அவங்களுக்கு தான் பரிசு கொடுக்கணும், அப்படின்னா எதுக்கு நீங்க பரிசு கொடுக்க வரீங்க, தேவையே இல்லையே….
எந்த மாடு வெற்றி பெறுவதோ அதை கொடுக்க போறீங்க… இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் நீங்க போய் அங்க நின்னுகிட்டு அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க…. இப்ப எப்படி மத்திய அரசோடு அரசியல் பண்றீங்க… இது வந்து நீங்க பாராளுமன்ற தேர்தல் வருது…. அப்போ நீங்க உங்களை திட்டுங்க, என்ன வேணாலும் பண்ணுங்க…. அது வந்து தேர்தலுக்காக நாம செய்கிறோம், அது வேற. நீங்க நித்தம், நித்தம் நித்தம் இந்த அஞ்சு ஆண்டு காலமும் அவங்களோட அடிப்பிடி சண்டை பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னா…. எப்படி என்ன செய்ய முடியும் ? ஒன்றுமே செய்ய முடியாது
மத்திய அரசில் யாரோ ஒருத்தங்க இருக்கதான் போறாங்க. நீங்க ஒரு சிப் மினிஸ்டரா நம்ப ஸ்டேட்டுக்கு என்ன வேணுமோ, அத போய் கேளுங்க மக்களுக்காக…. அதை விட்டுட்டு சம்பந்தமே இல்லாம உடனே வள்ளுவருக்கு இதை போட்டாங்க, அதை போட்டாங்கன்னு சொல்லிட்டு… நீங்களா போயி அதை கிளப்பி விட்டுட்டு… இதே ரெண்டு மூணு நாள், ஒரு வாரத்துக்கு ஓடும்… நானே சொல்றேன்….. இப்ப வந்து அவங்க செய்யற தவறுகள், மற்ற விஷயங்கள், அது எல்லாம் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வதற்காக….. இதையெல்லாம் அவங்க உபயோகிக்கிறாங்க என தெரிவித்தார்.