மகாராஷ்டிராவில் உள்ள சதாரா மாவட்டத்தில் சமாதன் சவான்(35) என்பவர் வசித்து வருகிறார்.  இவரும் அதே பகுதியில் வசிக்கும் ரிஷி அலி ராகுல் குத்துக்கடே என்ற திருநங்கையும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அவ்வபோது உடல் உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த திருநங்கை, சவானை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர், அந்தப் பெண்ணை சேலையால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்பு தான் காவல்துறையினரிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அந்தப் பெண்ணின் சடலத்தை கல்லை கட்டி கிணற்றிற்குள் வீசியுள்ளார்.

இதையடுத்து கிராம மக்கள் கிணற்றில் சிதைந்த உடல் இருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின் சம்பந்தப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேல் கண்ட விபரங்கள் தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.