அகமதாபாதில் உள்ள சயின்ஸ் சிட்டி சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தந்தை, தாய் மற்றும் மகன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் இருந்து வேகமாக வந்த மகேந்திரா ஸ்கார்பியோ கார் தாய் மற்றும் மகனை அடித்து தூக்கிச் சென்றது. இதில் தந்தை ரஞ்சித்சிங் பூல்கரியாவுக்கு காயம் இல்லை. இதைத்தொடர்ந்து அந்த காரின் ஓட்டுனர் அங்கிருந்து தப்பிச் சென்றார். உடனடியாக பூல்கரியா தன் மனைவி மற்றும் மகனை மீட்க முயன்றார். இந்த சம்பவத்தால் மனைவிக்கு தலை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதோடு மகனுக்கு தலை, மார்பு மற்றும் வயிற்றில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.  அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு குற்றவாளியை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.