ஆந்திரா மாநிலம் பெங்களூருவில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அதோடு மெக்கானிக் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் பைக் மற்றும் ஸ்கூட்டி போன்ற வாகனங்களை மர்மமான முறையில் திருடி வந்துள்ளார். கிட்டத்தட்ட 3 வருடங்களாக இவர் வாகனங்களை திருடிய நிலையில் தற்போது தான் பெங்களூரு காவல்துறையினரிடம் சிக்கி உள்ளார். இவரிடமிருந்து 20 ராயல் என்ஃபீல்டுகள், 40 ஆக்டிவா ஸ்கூட்டர்கள், 30 பல்சர் பைக்குகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.

காவல்துறையினரின் சோதனையின் போது 2 லட்ச மதிப்புள்ள என்ஃபீல்டு புல்லட்டை சாவி இல்லாமல் சாதாரணமாக லாக்கை உடைத்து திருடுவதை காவல்துறையினர் முன்னிலையில் பிரசாந்த் செய்து காட்டியுள்ளார். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளில் 12 பைக்குகள் தமிழ்நாட்டை சேர்ந்தது என்று பெங்களூரு காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் மூன்று வருடங்களாக திருடி வந்த திருடன் தற்போது அகப்பட்டுள்ள இந்த சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.