
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்திற்கு அடுத்து சுவாமி மலை அருகே திருவலஞ்சுழி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர் காளிதாஸ் (36). இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மேலும் காளிதாசுக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று காளிதாஸ் தலையில் ரத்த காயத்துடன் வீட்டு வாசலில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அருகிலுள்ள சுவாமிமலை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் காளிதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் காளிதாஸ் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காளிதாஸை கொலை செய்த நபர் யார்?, எதற்காக கொலை செய்துள்ளனர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பெயரில் காளிதாஸின் சகோதரரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.