இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜீப் வாகனத்தின் அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அருகிலிருந்த கோதுமை வயலில் இருந்து வந்த  சிறுத்தை ஒன்று அங்கிருந்தவர்கள் மீது பாய்ந்தது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்ற ஒடிய நிலையில் ஒருவர் தன் கையில் வைத்திருந்த கோடாரியால் அந்த சிறுத்தையை தாக்கினார். இதனை ஒருவர் வீடியோவாக பதிவு செய்த நிலையில் அது இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அந்த நபர் கோடாரியால் தாக்கியதில் சிறுத்தை உயிரிழந்தது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மீட்பு பணிக்காக சென்றிருந்தபோது திடீரென ஒரு சிறுத்தை வந்ததும், அப்போது தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வனத்துறை ஊழியர் தான் அதனை கோடாரியால் அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் சிறுத்தையை கொலை செய்த வனஊழியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.