கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒட்டியுள்ள பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு  சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதத்தில் எதிரே வந்த பேருந்து மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து வந்த 13 வாகனங்கள் மோதி உள்ளது. இதில் 8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து மோதிக் கொண்டுள்ளன.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தை பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.