தெலுங்கானாவில் ஒருவர் மின் கம்பத்தில் தெரு நாய் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் அந்த நபரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விலங்குகள் நல ஆர்வலர் பிரீத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது, குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு தெருநாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்துகிறார். அவரின் கொடூரமான செயலால் நாய் இறந்து விடுகிறது. அதன் பிறகு நாயின் உடலை அருகே இருக்கும் அவரது வயலில் புதைத்ததாக அந்த நபர் கூறியுள்ளார். எனவே பிரீத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.