மஹாராஷ்டிராவின் புனே நகரத்தில் உள்ள சுவர்கேட் பகுதியில், மது அருந்திய ஒரு நபர் நடுரோட்டில் புஷ்அப்ஸ் செய்த வீடியோ ரெடிட்டில் பகிரப்பட்டதுடன், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், நடுரோட்டில் அந்த நபர் புஷ்அப்ஸ் செய்வது போன்று காட்சியளிக்கின்றது. இந்த சம்பவம் கடந்த 5ம் தேதி இரவு நேரத்தில் நடைபெற்றது எனக் கூறப்படுகிறது, ஏனெனில் சாலையில் அதிக வாகனங்கள் காணப்படவில்லை.

 

 

View this post on Instagram

 

A post shared by News24 India (@news24official)

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களிடையே வித்தியாசமான மற்றும் நகைச்சுவையான கருத்துகள் அதிகம் வந்துள்ளன. “அவன் புஷ்அப்ஸ் பண்ணல, ரோட்டை தள்ளிட்டு இருக்கான்,” என ஒருவர் கேலி செய்துள்ளார். “ஃபிட்னஸ் ஃப்ரீக் மாதிரி ஆளுங்க footpathல போடணும், அப்புறம் யாரும் car கொண்டு போக மாட்டாங்க,” என மற்றொருவர் விமர்சித்துள்ளார்.