
நம் பூமியை வெப்பம் அடைவதில் இருந்து பாதுகாக்க மரங்கள் வளர்ப்பது மிகவும் அவசியமாகும். பூமியை காப்பாற்றுவது மனித குலத்தை காப்பாற்றுவதாகும். ஆனால் தற்போது மரங்கள் நேரடியாக மனிதர்களின் வாழ்வை காப்பாற்றுவதாக புதிய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் கடந்த ஆண்டு கடுமையாக வாட்டி வந்த வெப்பநிலையில் ஐரோப்பாவில் உள்ள மற்ற இடங்களை காட்டிலும் மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளின் வெப்ப நிலையானது 15 முதல் 25 சதவீதம் வரை குறைவாகவே காணப்பட்டன
மேலும் இந்த மரங்கள் ஐரோப்பாவில் வெப்ப தாக்கத்தினால் ஏற்படும் மரணங்களை 40 சதவீதம் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஐரோப்பாவில் உள்ள 93 நாடுகளில் நிழல்கள் தரும் மரங்களில் 15 சதவீதத்திலிருந்து 30 சதவீதத்திற்கு உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மரங்களின் இன்றியமையாத தேவையை உணர்த்துகிறது.