இன்ஸ்டாகிராம் மூலம் கன்டென்ட் கிரியேட்டராக மிகப் பிரபலமானவர் முகமது ஆசிக். இவர் தனது இணையதள பக்கத்தில் வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோர், மாணவர்கள் என பலருக்கும்  உதவி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில், வயதான முதியவர் ஒருவர் அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் பெயர் அபூ சலீம் (120). அவர் பர்மாவை சேர்ந்தவர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் மிட்டாய் விற்பனை செய்து வந்துள்ளார். அவருக்கு தற்போது 120 வயது ஆன போதிலும் தற்போது வரை மிட்டாய் வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.

தனது 120 வயதிலும் தேங்காய் மிட்டாய், இஞ்சி மிட்டாய், குளுக்கோஸ் மிட்டாய் என அனைத்தையும் வீட்டிலேயே செய்து விற்பனை செய்து வருகிறார். மேலும் இவர் தமிழக முழுவதும் வண்டி இன்றி நடந்து சென்று மிட்டாய் வியாபாரம் செய்த கதையையும் அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mohamed Ashik (@abrokecollegekid)

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிட்டாய் வியாபாரம் செய்ததாகவும், தற்போது வயது மூப்பின் காரணமாக மக்களே நேரில் வீட்டுக்கு வந்து வாங்கும் நிலை ஏற்பட்டு விட்டதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து அவரே வீட்டில் அடுப்பில் மிட்டாய்களை காய்ச்சி தயாரிப்பதை காட்டினார்.

தானும் நாள் ஒன்றுக்கு இரண்டு, மூன்று மிட்டாய்கள் சாப்பிடுவதாகவும், தனக்கு எந்தவித நீரழிவு, பிபி போன்ற நோய்களும் இல்லை எனவும் கூறுகிறார். உழைப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.