
மங்களூர் அருகே உள்ள கிண்ணிகொளி பகுதியில் கடந்த 17ம் தேதி ஒரு ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்தது. அந்த ஆட்டுக்குட்டி ஒரே உடலுடன் 2 தலைகளை கொண்டுள்ளது. இதனால் அந்த குட்டி பிறந்த நாள் அன்று, தாயின் பாலை பெற முடியாத நிலையில், பாட்டில் மூலம் பால் கொடுக்கப்பட்டது. அதோடு அந்த குட்டிக்கு 4 கண்கள் கொண்டுள்ள நிலையில், நடுவில் உள்ள இரண்டு கண்கள் பார்வை தெரியவில்லை. இதையடுத்து தலையின் அளவு அதிகமாக இருப்பதால் குட்டி தன்னால் நின்று கொள்ள முடியவில்லை.
இதனால் அந்த குட்டியின் உரிமையாளர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர், இதை போலிசெபாலி எனப்படும் மருத்துவ பிரச்சனை என்று தெரிவித்தார். இதைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த குட்டி ஆரோக்கியமாக இருப்பதால், அதனுடைய ஆயுள் காலம் குறித்த நம்பிக்கை இருப்பதாகவும், அதற்கு மிகுந்த கவனம் தேவை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் குட்டி தாயின் பாலை இயல்பாகப் பருக தொடங்கினால், அதன் வாழ்நாள் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.