போலீஸ் என கூறி பேசிய நபரால் ஒரு பெண் 27.30 லட்சத்தை இழந்த சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவர் மகாராஷ்டிரா போதை தடுப்பு பிரிவிலிருந்து பேசுவதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். மேலும் அந்த பெண் அனுப்பிய பார்சலில் போதைப்பொருள் இருந்ததாக கூறி நடவடிக்கை எடுக்காமல் இருக்க 27.30 லட்ச ரூபாய் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண்ணும் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிருக்கு பணத்தை அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.