சென்னையில் பெண்ணின் புகைப்படத்தை உருமாற்றம் செய்து தவறாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது சென்னையில் பெண் ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  அந்தப் பெண் தன் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் அந்தப் பெண் உள்பட அவரது குடும்பத்தினரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த மர்ம நபர் பிடிபட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் செம்பியம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பது தெரியவந்தது. தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் ஒரு கட்டத்தில் வினோத்குமார் உடைய குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில் வினோத்குமார் அந்த பெண்ணிடம் தன்னிடம் மட்டும் தான் பழக வேண்டும் என்று வற்புறுத்தியதால் அந்தப் பெண் அவரிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். இதனால் அந்த பெண்ணை பழி வாங்குவதற்காக போட்டோவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய சிறையில் அடைத்துள்ளனர்.