சீனாவில் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் இடையே அதிகரிக்கும் உடல் பருமனை கட்டுப்படுத்த உடற்கல்வி வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முதன்மை பாடங்களில் ஒன்றாக சேர்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் ஒவ்வொரு நாளும் 2 மணி நேரமாவது உடற்கல்வி பாடத்திற்காக ஒதுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சீனாவில் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனம், கணிதம், ஆங்கிலம் போன்ற பாட ஆசிரியர்களைப் போல உடல் பயிற்சி ஆசிரியர்களும் நடத்தப்பட வேண்டும்.

இதனை தொடக்க நிலை, உயர்நிலைப் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் கால்பந்து, கூடப்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகளில் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். முழுமையான பள்ளிக் கல்விக்கான அணுகு முறையில் உடற்பயிற்சி கல்வியும் அடங்கும் என்று அந்நாட்டு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனா வருகிற 2035 ம் ஆண்டு சிறந்த கல்வியறிவு பெற்ற நாடாக உருவாகும். இதற்காக தனது முதல் தேசிய திட்டத்தை அந்நாடு ஜனவரி மாதம் வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிட்டப் பார்வை, உடல் பருமன் விகிதங்களை கட்டுப்படுத்த இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கிராமப்புறங்களில் இந்த இடைவெளியை குறைக்க ஓய்வற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களை பணியமர்த்த கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பதவிகளின் ஈர்ப்பை அதிகரிக்க ஊழியர்களுக்கு சம ஊதியம் மற்றும் செயல் திறன் அடிப்படையிலான சலுகைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.