
சென்னையில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த ஒன்பதாவது நுழைவாயில் வழியாக கடத்தல் பொருட்களை கொண்டு செல்வதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஒன்பதாவது நுழைவாயில் வழியாக தான் விமான நிலையத்தின் தூய்மை பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், காவலாளிகள் உள்ளே செல்வதற்கும், வெளியே பொருள்களை எடுத்து செல்வதற்கும் பயன்படுத்துகின்றர்.
தற்போது இந்த நுழைவாயிலை வெளிநாட்டு மோசடி கும்பல்கள் தங்கம் போன்ற பல்வேறு சட்டவிரோதமான பொருள்களை எடுத்துச் செல்ல பயன்படுத்திக் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.பல்லாவரம் பகுதியில் உள்ள ஒன்பதாவது வாயில் வழியாக உணவு, எரிபொருள்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த வாயில் வழியாக அங்கு பணிபுரியும் பணியாளர்களின் உதவியுடன் சட்ட விரோதமான பொருள்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத்துறை இயக்குனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுபோல கடந்த வாரம் தூய்மை பணியாளர்கள் தீபக் மற்றும் பேச்சு முத்து ஆகியோர்களின் உதவியுடன் துபாயிலிருந்து 2.2 கிலோ தங்கம் அதன் மதிப்பு 1.5 கோடியாகும் வெளியே கொண்டு செல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நுழைவாயிலில் பயணிகள் வராததால் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இதனை பயன்படுத்தி வெளிநாட்டு மோசடி கும்பல்கள் சட்ட விரோதமான கடத்தல்களை மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, இந்த வாயிலில் உணவு பொட்டலங்கள், எரிபொருள்கள் போன்ற அடிப்படைத் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுவதால் தனித்தனியாக ஆய்வு செய்வது கடினமானதாகும். எனவே, பொருள்கள் எடுத்து வரப்படும் கண்டெய்னர்கள் வாகனங்களில் ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டு ஆய்வு செய்வதன் மூலமே இவ்வகையான கடத்தல்களை சரி செய்ய முடியும் என சுங்கத்துறை மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.