
துபாயின் ரியல் எஸ்டேட் சந்தை உலகப் புகழ்பெற்றது. இங்கு பரந்த வில்லா வீடுகளிலிருந்தும், சிறிய இடங்கள் வரை பல்வேறு வகையான வசதிகள் கிடைக்கின்றன. ஆனால் பொதுமக்களுக்கு ஏற்ற வாடகை வீடு காணுவது கடினம். சமீபத்தில், துபாய் மெரினா பகுதியில் ஒரு இடம் மாத வாடகைக்கு ரூ.62,000 கோரப்பட்டுள்ளது என்ற விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலானது.
ஒரு சிங்கிள் கட்டிலும், ஒரு அலமாரியும் மட்டுமே கொண்ட அந்த இடம், நெருக்கடியான பரப்பில் அமைந்திருந்தது. மேலும், ரூ.11,618 வைப்பு தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
இந்த விளம்பரம் பல நெட்டிசன்களின் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிலர், “மீதமுள்ள அறை எங்கே?” என நகைச்சுவை கலந்து விமர்சித்தனர். சிலர் இந்த சிறிய இடத்தின் புகைப்படத்தை பார்த்து மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், தங்களது சொந்த வீடுகளின் பால்கனி கூட இதைவிட பெரியதாக உள்ளதெனக் கூறி பலர் கருத்து பகிர்ந்தனர்.
இதேபோல், மும்பையைச் சேர்ந்த சமூக ஊடக பயனர்கள் இதைப் பார்த்து, “மும்பையில் இதைவிட குறைவான இடத்திலும் மக்கள் வாழ்கிறார்கள். இதை நாங்கள் சொர்க்கம் என்போம்,” என நகைச்சுவையாக கருத்து தெரிவித்தனர்.
சிலர், “உயர்ந்த வரிவிதிகள், விசா செலவுகள், சொத்து விலைகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, துபாய் வெளிநாட்டவர்களுக்கு விருப்பமற்ற நாடாக மாறி வருகிறது,” என்றும் கவலை தெரிவித்தனர். இது, துபாய் நகரத்தின் நவீன வளர்ச்சிக்கும் எதிர்பாராத புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.