கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரைப் பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மனை தரிசிப்பதற்காக நாள்தோறும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இதை பயன்படுத்தி சிலர் மாற்றுத்திறனாளி போல் நடித்து கோயில் முன்பு அமர்ந்து கொண்டு பக்தர்களிடம் பிச்சை எடுத்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதில் ஒருவர் மாற்றுத்திறனாளி போல் நடித்து கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பிச்சை எடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தனர்.

இதை தொடர்ந்து அந்த நபர் தட்டில் இருக்கும் காசை கையால் எடுத்து அவரது சட்டைப்பையிக்குள் வைப்பது போன்ற காட்சியும் பின் அவரது கையை மீண்டும் சட்டைக்குள் ஒளித்து வைத்துக் கொள்வது போன்ற காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை அள்ளிகுவித்து வருகின்றனர்.