புனே நகரத்தில் ஹெல்மெட் போடாமல், மொபைலில் கவனம் செலுத்தியபடி பைக் ஓட்டிய ஒரு நபர், திடீரென வலதுபுறம் திரும்ப முயன்ற போது எதிரே வந்த கார் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக, பொதுமக்கள் மற்றும் இணையவாசிகள் பாதுகாப்பில்லாத பைக் ஓட்டும் பழக்கத்தினை கடுமையாக விமர்சித்துள்ளனர். அதாவது புனேவில் ஒரு நபர் ஹெல்மெட் போடாமல் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் செல்போனை பார்த்தபடியே பைக் ஓட்டியதால் எதிரே வந்த காரை கவனிக்காமல் வலது புறம் திரும்ப முயன்றார் அப்போதுதான் அவருடைய பைக் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் ஒருவர் “உயிரை விட மொபைல் தான் முக்கியமா? “என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த சம்பவம் சாலையில் பாதுகாப்பாக கவனமாக பயணிக்க வேண்டும் என்பதற்கான கடுமையான பாடமாக அமைந்துள்ளது.