
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பாண்டிதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் மெக்கானிக் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்காக இவர் பெங்களூருவில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். அப்போது திருவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவர் அங்கு நின்று கொண்டிருந்த எட்டாவது வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை யாரும் இல்லாத இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது செயலை கண்டு பயந்து போன அந்த மாணவி அவரிடம் இருந்து தப்பி சென்றார். பின்னர் நடந்ததை தனது பெற்றோரிடம் கூறி அழுதார். மாணவி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சாணர்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் பாண்டிதுரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் எட்டாம் வகுப்பு சிறுமிக்கு நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.