ஏர் இந்தியா விமானத்தில் பிரிட்ஜ்ஸ்டோனின் நிறுவன இயக்குனர் மீது இந்தியர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இன்று அதிகாலை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் பாங்காங் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது விமானம் தரை இறங்கும் நேரத்தில் துஷார் மசந்த் என்பவர் திடீரென அருகிலிருந்த பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவன இயக்குனரான ஹிரோஷியின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்த ஹீரோஷின் விமான ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக கேபின் பணியாளர்கள் ஹிரோஷியை குளியல் அறைக்கு அழைத்துச் சென்று உடைமாற்றம் செய்ய உதவி செய்தனர். இந்த சம்பவம் விமானத்தின் கேப்டனுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தகாத நடத்தை காரணமாக துஷார் 2D இருக்கையிலிருந்து 14 என்ற சாதாரண இருக்கையில் அமர்த்தபட்டார்.

இதைத் தொடர்ந்து விமானம் தரையிறங்கியதும் துஷார் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்ட நிலையில், ஹிரோஷி இது தொடர்பாக எந்தவிதமான புகாரும் கொடுக்கவில்லை. அதோடு “இது குறித்து மேலும் நேரம் செலவழிக்க விரும்பவில்லை” என்று கூறியதால் துஷார் வசந்த் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் அவருக்கு வாய் மொழியாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா இயக்குனர்கள் DGCA வுக்கு தகவல் அளித்துள்ளனர்.