அட்லாண்டாவிலிருந்து சிகாகோ நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த சம்பவம் பயணிகளை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியது. விமானம் பறந்தபோது சியிலிங் பேனல் திடீரென கீழே விழுந்தது. பயணிகள் தங்களது கைகளை கொண்டு பேனலை தாங்கி பிடித்தப்படியே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை சமூக ஊடகத்தில் பயனர் லூக்காஸ் மைக்கேல் லெய்ன் பகிர்ந்த வீடியோவில், பயணிகள் கைகளால் சியிலிங் பேனலை தாங்கி இருப்பது தெளிவாக பார்க்க முடிகிறது. பின்னர் விமான ஊழியர்கள் துரிதமாக நடவடிக்கை எடுத்து டேப் கொண்டு சியிலிங் பேனலை ஓட்டினர்.

சம்பவத்தின் பிறகு, பயணிகள் அட்லாண்டாவிற்கு திரும்பிய பிறகு வேறு விமானம் மூலம் சிகாகோ சென்றனர். இந்த அனுபவத்திற்குப் பதிலாக, டெல்டா நிறுவனம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நிவாரணம் அளித்ததாக லெய்ன் குறிப்பிட்டுள்ளார்.

 

இருப்பினும், பயணிகள், விமானம் பறக்கும் நிலையில் சியிலிங் பேனல் விழுந்ததை பார்ப்பது மிகவும் மனஅழுத்தம் ஏற்படுத்தியதாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து பலரும் விமான பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளனர். சிலர், “விமானத்தில் உள்ள இந்த பிளாஸ்டிக் பேனல்கள் ஆபத்தில்லாதவை” என்று கூறினாலும், மற்றவர்கள் “சாதாரண சியிலிங் பேனல் விழுந்தாலும் பயணிகளுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு” என கவலை தெரிவித்தனர்.

டெல்டா நிறுவனம் விளக்கம் அளித்ததில், “விமானம் பறக்கும் போது பயணிகள் சியிலிங்கை தாங்கி வைக்க வேண்டிய நிலை நீக்கப்பட்டது, எவரும் காயமடையவில்லை” என்றும், “இவற்றால் ஏற்பட்ட பயண தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்றும் தெரிவித்தது