கடந்த முறை அதிமுக ஆட்சி நடைபெற்ற போது, மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்க, அரசு கேபிள் டிவி தொடங்கப்பட்டது. தனியார் கேபிள் டிவி நிறுவனங்களை விட அரசு கேபிள் டிவியில் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, அரசு கேபிள் டிவியின் தரம் குறைக்கப்பட்டு முடக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தர்மபுரியில் அரசு கேபிள் இணைப்பில் உள்ள தனியார் சேனல் ஒன்றில் ஆபாச படம் ஒளிபரப்பப்பட்டது.

இதனைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .பொது தளத்தில் இது போன்ற ஆபாச படங்கள் ஒளிபரப்பப்படுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக கேரளாவில் பேருந்து ஒன்றில் வைக்கப்பட்டிருந்த டிவியில் ஆபாச படங்கள் ஒளிபரப்பாகி உள்ளது.