
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிளாய் பகுதியை பகுதியைச் சேர்ந்தவர் விஷ்வா. இவருக்கு வயது 38. இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட ரவுடி விஸ்வாவை காஞ்சிபுரம் மாவட்டம் தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களாக தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் சோக்கண்டி என்ற பகுதியில் விஸ்வா பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் படி அங்கு தனிப்படை போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் விஷ்வா போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது, தற்காப்பிற்காக போலீசார் பிரபல ரவுடி விஸ்வா மீது துப்பாக்கி நடத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்து ரவுடி விஷ்வா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.