
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பு. முட்லூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள புறவழிச் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக கார் மற்றும் லாரி நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த போற விதத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக இருந்தனர்.
அதன்படி யாசர் அராபத் (40), முகமது அன்வர் (58), ஹாஜிதா பேகம் (62), சாரா பாத் நிஷா (30), அப்னான் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் இவர்கள் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை சந்திப்பதற்காக சென்ற நிலையில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சமூக தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.