
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. அதாவது திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்று விட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த வேன் மோட்டத்தூர் என்ற பகுதிக்கு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 6 வேறு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.