சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ள ஹெல்மெட் கேமரா வீடியோ தற்போது நடந்து முடிந்த ஒரு கோர சம்பவத்தை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் வலம் வருகிறது. அதாவது அந்த வீடியோவில் சிக்னலில் ஓட்டுநர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது சிக்னல் பச்சை நிறத்திற்கு வரும்போது 2 ஸ்கூட்டர்கள் சாதாரணமாக முன்னேறுகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு ஹீரோ பைக் அதிவேகமாக வந்து திடீரென முன்னால் சென்ற ஸ்கூட்டரின் மீது நேரடியாக மோதியது.

இதனால் அந்த ஸ்கூட்டர் பக்கத்தில் இருந்த மற்றொரு ஸ்கூட்டியின் மீது மோதி கீழே விழுந்தது . இதில் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் ஒரு ஸ்கூட்டர் தானாகவே நகர்ந்து சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேர் மீது மோதியது. இந்த காட்சிகள் அனைத்தையும் சிக்னலில் வந்து கொண்டிருந்த ஒருவரின் ஹெல்மெட் கேமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த கேமரா விபத்தின் அனைத்து காட்சிகளையும் தெளிவுபடுத்திய நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.