குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், வேகமாக வந்த அரசு பேருந்து சாலை ஓரத்தில் நடந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதியதில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். ராஜ்கோட்டின் KKV சோக் பகுதியில் புதன்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில், சாலையில் நின்ற வாகனங்களையும், மோட்டார் சைக்கிள்களையும் பேருந்து மோதிய காட்சிகள் சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

இந்நிலையில், பேருந்து ஓட்டுநர் மதுபானம் அருந்திய நிலையில் வாகனம் ஓட்டினார் என அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்த, அவர்கள் சாலையை மறித்தும், பேருந்தை சேதப்படுத்தியும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் பொதுமக்களை கட்டுப்படுத்தினர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.