பெங்களூருவில் ஒரு சாலையில் நின்றிருந்த காரில், திடீரென ஸ்கூட்டர் மோதி விபத்தை ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Suzuki XL6 காரின் பின்புற டாஷ்காம் மூலம் பதிவாகியுள்ள இந்த காட்சியில், அச்சு அசலாக காரின் பின்புற கண்ணாடியை மோதும் ஸ்கூட்டர், முழுவதுமாக உடைந்து சிதறும் கண்ணாடியின் காட்சி பதிவாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக, இணையத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

சிலர், காரை தவறான இடத்தில் நிறுத்தியுள்ளார். அதனால் காரின் ஓட்டுநர் மீது தான் தவறு என்று கூறுகின்றனர். ஆனால் சிலர் ஸ்கூட்டர் ஓட்டுநரின் கவனக்குறைவையே காரணமாகக் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, வாகனத்தை இயக்கும் போது இசை கேட்பது, குறைந்த தரமான ஹெல்மெட் அணிவது போன்று போக்குவரத்து விதிகளை மீறுவது விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.