உத்திர பிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஸ்வீட்டி(20) என்ற மனைவி பிஎஸ்சி பயோடெக் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பள்ளி வகுப்பறையில் மாணவ, மாணவிகள் என அனைவரும் அமர்ந்திருந்தனர். அப்போது ஸ்வீட்டி தான் மறைத்து வைத்திருந்த விஷயத்தை எடுத்து குடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்ன என்பதை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.