
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய்ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது Polygraph சோதனையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த சோதனையில் சஞ்சய் ராய் கூறிய விஷயங்களை சிபிஐ தெரிவித்துள்ளது. அதாவது தன்னுடைய உறவினர் ஒருவருக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைந்து விட்டதால் சஞ்சய் ராய் மருத்துவரை தேடி சென்றுள்ளார்.
அப்போது செமினார் ஹாலில் இரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் கிடந்ததாகவும் அவரை தான் எழுப்ப முயன்றதாகவும் கூறியுள்ளார். அவர் எழும்பாததால் பயந்து போய் அங்கிருந்து ஓடி விட்டதாக சஞ்சய் ராய் கூறியதாக சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும் முன்னதாக பெண் மருத்துவர் கொலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான போது 150 mg அளவுக்கு விந்தணுக்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அது கூட்டு பாலியல் வன்கொடுமையாக இருக்க வாய்ப்பு கூடும் என்று தகவல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.