இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது த.செ‌ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதே நாளில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த வரும் கங்குவா படமும் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக கங்குவா படம் தான் அக்டோபர் 10-ல் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அதே நாளில் வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆகப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக தற்போது கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர். இது குறித்து நடிகர் சூர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கடந்த 50 வருடங்களாக தமிழ் சினிமாவின் அடையாளமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருப்பதால் மூத்தவரான அவருக்கு வழி விடுவது தான் ‌ சரியானதாக இருக்கும். எனவே கங்குவா படத்தில் ரிலீஸ் செய்தியை தள்ளி வைக்கிறோம். கங்குவா ஒரு குழந்தை மாதிரி. ஆயிரம் பேரில் உழைப்பு நிச்சயம் வீணாகாது. மேலும் கண்டிப்பாக கங்குவா படம் ரிலீஸ் ஆகும்போது அதனை அனைவரும் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.