பிரிட்டனில் ஒரு நர்ஸ், தனது முன்னாள் காதலனை விடாமல் தொல்லை செய்ததற்காக சிறை தண்டனை பெற்றுள்ளார். சோபி என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த நர்ஸ், தனது காதலன் டேவிட்டை பிரிந்த பின்னரும் தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். இவர்கள் பிரிந்த அடுத்த நாளே டேவிட்டின் செல்போனுக்கு 1000 முறை போன் செய்துள்ளார்.அதோடு டேவிட்டின் வீட்டு ஜன்னலை உடைத்துக் கொண்டு அவர் வரும் வரை பெட்ரூமில் காத்திருப்பார். அவர் வந்த பிறகு செல்போனை பிடுங்குவது என அட்ராசிட்டி செய்துள்ளார். பின்னர் தன் காதலனுடன் வம்பு இழுத்த பிறகு ஜன்னல் வழியாக அங்கிருந்து சென்றுவிடுவார். அதோடு தன்னுடைய முன்னாள் காதலன் எந்த இடத்திற்கெல்லாம் செல்கிறார் என்பதை கண்காணிப்பதற்காக அவருடைய காரில் ட்ராக்கிங் டிவைஸ் ஒன்றினை வைத்துள்ளார்.

இப்படி அவர் செல்லும் இடத்திற்கெல்லாம் போய் சோபி தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளார். ஒரு நாளைக்கு ஆயிரம் மிஸ்டுகால் வரை கொடுத்தும் போகும் இடத்திற்கெல்லாம் சென்றும் தொந்தரவு செய்ததால் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத டேவிட் சோபி மீது புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் சோபிக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த சம்பவம் வல்லவன் படத்தில் சிம்பு வேண்டாம் என்று மறுத்த பிறகும் ரீமாசென் விடாமல் துரத்தி காதலிக்கும் காட்சிகள் தான் நினைவுக்கு வருகிறது.