
டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பயணத்தின் போது டிரைவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை உணர்ந்து பதற்றமின்றி வாகனத்தை ஓட்டிய சம்பவம் இணையதளத்தில் வைரல் ஆகி பாராட்டுகளை பெற்று வருகிறது. அதாவது டெல்லியை சேர்ந்த ஹனி பிப்பால் என்ற பெண் ஊபர் காரில் தனது மகள், தாய் மற்றும் பாட்டியுடன் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது காரை ஓட்டி வந்த டிரைவர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மோசமாக இருந்ததை ஹனிபிப்பால் கவனித்தார்.
உடனே அவர் வாகனத்தின் ஸ்டியரிங்கை பிடித்து பாதுகாப்பாக விபத்து ஏற்படாத வகையில் பயணத்தை முடித்தார். இந்த சம்பவம் இணையதளங்களில் வைரலாகி அந்த பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்து ஹனி பிப்பால் “இதே போன்ற அவசர நிலைகளுக்கு அனைவரும் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும்” என்று இன்ஸ்டாகிராம் வீடியோவில் அறிவுரையாக கூறியுள்ளார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணின் தைரியத்தையும், நேர்த்தியான செயலையும் பாராட்டி புகழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அவசர நிலைகளில் ஓட்டும் திறன் இருந்தால் எந்த அளவுக்கு உயிரை காக்க முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இருக்கிறது.