இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில் வசித்து வருபவர் அனிகா ரோஸ். இவர் ஒரு cuddling expert. அன்பும், ஆறுதலும் தேவைப்படும் மனிதருக்கு அவர்களது மகிழ்ச்சிக்கு உதவும் விதமாக இதனை செய்து வருகிறார். இவர் தன்னுடைய கட்டிப்பிடிக்கும் சிகிச்சையின் மூலம் வரும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிப்பதாக பலரும் கூறுகின்றனர். இந்த கட்டிப்பிடி வைத்தியத்தின் மூலம் மன அழுத்தம் குறைவதாகும் பிரச்சனைகளில் இருந்து விடுபட வழிகள் தோன்றுவதாகவும் இவரிடம் வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் ஒரு மணி நேரத்திற்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்வதற்கு ரூபாய் 7400 கட்டணம் வாங்குகிறார். அன்பும், ஆறுதலும் தேவைப்படும் மனிதர்கள் அதிகமாகி வருவதால் சமீப காலமாக தனக்கு அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வருவதாக அனிகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் அன்பையும், ஆதரவையும் காசு கொடுத்து வாங்கும் நிலைமை வந்துவிட்டது என கவலை தெரிவித்துள்ளனர்.