சென்னை பூந்தமல்லி அருகே செந்நீர்குப்பம் பகுதியில் குடிசை வீடுகள் உள்ளது. இந்நிலையில் அதில் ஒரு வீட்டில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக தீப்பொறி குடிசையின் மீது பட்டதில் குடிசை தீப்பிடித்து எறிய தொடங்கியது. ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து அடுத்தடுத்து இருந்த ஒன்பது வீடுகளில் பரவி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும் தீ விபத்தில் 9 வீடுகளில் இருந்த உடமைகள் முழுவதும் எரிந்து நாசமானது. குறிப்பாக கல்லூரி மாணவி ஒருவரின் ஹால் டிக்கெட், புத்தகங்கள் உள்ளிட்டவை தீயில் எறிந்தன. சென்னையில் குப்பம் பகுதியைச் சேர்ந்த அருள், தினகர், சுகுணா, லிங்கேஷ், முருகா, வேலு, பழனி, சரவணா, தமிழரசன் உள்ளிட்ட 9 பேரின் குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வட்டாட்சியர் ஆறுதல் கூறி தற்காலிகமாக மீட்டு மாற்று இடத்தில் தங்க வைத்துள்ளனர்